நாகர்கோவில் அக் 27
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஈஷா அறக்கட்டளை என்னும் பெயரில் ஐக்கி வாசுதேவ், மாற்று மதத்தினர் குறித்து அவதூறு பரப்புவதும், வெறுப்புப் பிரச்சாரம் செய்வதையுமே முழு நேர வேலையாக செய்து கொண்டு இருக்கிறார்.
ஒருபக்கம் இந்தியாவுக்குள் மதத்தின் பெயரால் வியாபாரம் செய்து கொண்டே இன்னொரு புறத்தில் வளைகுடா நாட்டிலும் தன் ஆன்மிகம் என்னும் பெயரில் அருவருக்கத்தக்க வியாபாரத்தை செய்யத் தொடங்கி உள்ளார். சத்குரு அரேபியா என்னும் பெயரில் அவர் தமிழில் பேசுவதை கீழே அரபு மொழியில் மொழி பெயர்க்கின்றனர். அதில் முழுக்க அவதூறை மட்டுமே பரப்புகிறார் ஜக்கி வாசுதேவ்.
அதில் சத்குரு, எனச் சொல்லிக் கொள்ளும் அவர், ‘இளம் பெண்களைப் போல் சிறுமிகளையும், சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டும். கர்நாடகா மாநிலத்தில் 430 உறுப்பினர்கள் கொண்ட ஒரே குடும்பத்தை சந்தித்ததாகவும், அந்த குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்த புரிதலே இல்லை எனவும் இஷ்டத்திற்கு அடித்து விடுகிறார். இதே போல், இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்பு, திருமணம் என்னும் முறையே இருக்காது என மொத்த மகளிர் சமூகத்தையும் கொச்சைப்படுத்துகிறார்.
திருமண முறையே இருக்காது என சொல்லும் ஜக்கியின் பேச்சுக்குப் பின்னால், பெண்களின் கண்ணியத்தையே கேள்விக்குள்ளாக்குகிறார்.
தமிழகத்தில் மூட நம்பிக்கையை விதைத்தது போதாது என இப்போது சவுதி அரேபியாவிலும் இப்படியே பேசி வருகிறார். தான் புகைப்படமே எடுத்துக் கொள்வதில்லை எனவும், அப்படியே புகைப்படம் எடுத்தால், அவர் போட்டோவுக்கு முன்பு ருத்ராட்சை மாலையைக் காட்டினால் அது நேராக சுற்றும். ஒரு கொலைகாரன் புகைப்படத்தைக் காட்டினால் எதிர்திசையில் சுற்றும் எனவும் கதை சுற்றுகிறார். நியாயமாகப் பார்த்தால் தன் மனைவியை கொலை செய்த ஐக்கியின் போட்டோவைப் பார்த்து தான் தலைகீழாக சுற்ற வேண்டும். அதேபோல் இன்னும் இருபது ஆண்டுகளில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மட்டும் தான் பிறக்கும் என்கிறார். யானை வழித்தடங்களை அழித்து, ஓடும் நீரின் வேரினை அழிப்பது போல், ஆற்றை அழித்து ஈஷா மையம் ஆக்கிரமிப்பு செய்த மனசாட்சியே இல்லாத ஜக்கி, சவுதியில் வகுப்பெடுத்து பணம் பார்க்கத் துடிப்பது மோசமான செயல்!
இஸ்லாமிய தீவிரவாதம் என்பது, கடவுளின் வார்த்தை என போர் தொடர்பான வசனத்தை எடுத்து மேற்கோள் காட்டுகிறார். இஸ்லாம், ஒரு கொலையே நடந்து விட்டாலும் கூட, சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால் விடுவிக்கும் உயர்ந்த பண்பு இஸ்லாத்தில் உண்டு. இது, சவுதி அரேபியாவில் சட்டமாகவும் உள்ளது. ஆனால் இந்துமத நூல்கள் குறித்தே புரிதல் இல்லாத ஜக்கி, குரான் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதே போல் கடந்த 2019 ஆம் ஆண்டு,
லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் அழைப்பின் பேரில் உரையாற்ற சென்ற ஜக்கி வாசுதேவ், இஸ்லாமிய மாணவர்களைப் பார்த்து, தாலிபான் எனப் பேசியது சர்ச்சை ஆனது. அதைத் தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டதையும் நினைவூட்டுகிறேன். ஈஷாவுக்குள் தகன மேடை வரை வைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதிலேயே சத்குரு என சொல்லிக் கொள்பவரின் மறுபக்கம் தெரிய வருகின்றது. அவர் பிற மதங்களை கொச்சைப் படுத்தியும், தன்னைத் தானே மிகைப்படுத்தியும் பேச தடைவிதிக்க அரசை வலியுறுத்துகிறேன். சத்குரு இனியும் நாவடக்கத்துடன் பேசாவிட்டால் போராட்டத்தை முன்னெடுப்போம். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.