நாகர்கோவில், ஜூலை – 21,
திருவனந்தபுரம் கன்னியாகுமரி இரட்டை வழி பாதை பணிகளுக்காகவும், இரயில்வேயில் நடைபெற்றுவரும் பணிகளுக்காக இரணியல் ரயில் நிலையம் அருகே கருங்கல் ஜல்லி கற்கள் சேமிப்பு கிட்டங்கி அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அமைய இருக்கும் ஜல்லி கிடங்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தி அங்கு வசித்து வரும் மக்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. இரயில் நிலையம் அருகே அமைக்கப்படுவதால் ரயில் பயணிகளுக்கும், ரயில் நிலையமும் மாசுபடும், பணிகளுக்காக அருகே உள்ள குடியிருப்புகளும் இடிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியுறும் நிலை ஏற்ப்படும் ஆகவே அந்தக் கிடங்கை மக்கள் நடமாட்டம் இல்லா இடத்திற்கு மாற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட விஜய்வசந்த் எம். பி ரயில்வே பொது மேலாளர் அவர்களை சந்தித்து மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து நேற்று இரணியல் ரயில் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில்
திருவனந்தபுரத்தில் இருந்து வந்து இருந்த ரயில்வே அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரணியல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிடங்கால் ஏற்படும் பல்வேறு சிரமங்களை எடுத்துரைத்து மாற்று இடம் தேர்வு செய்ய வலியுறுத்தினர்.
நிறைவாக விஜய்வசந்த் உங்களின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்யும் உங்கள் கோரிக்கை
அனைத்தும் பரிசீலிக்கப்படும் என கூறினார்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், வார்டு உறுப்பினர்களும், பேரூராட்சி தலைவர்கள், பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.