சென்னை, நவ. 30,
மருத்துவ ஊட்டச்சத்து துறையில் உலகளவில் புகழ் பெற்ற டச்சு மெடிக்கல் ஃபுட் பி.வி. நிறுவனம், பிரிஸ்டைன் பேர்ல் ஃபார்மா நிறுவனத்துடன் இணைந்து ஊட்டச்சத்து தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.
இந்தியாவில் நடைபெற்ற தேசிய நுரையீரலியல் கருத்தரங்கு – 2024 நிகழ்வின்போது, மூச்சு மண்டல நோய்களை இலக்காகக் கொண்டு இத்தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது.
டச்சு மெடிக்கல் ஃபுட் நிறுவனத்தின் இணை-நிறுவனர்கள் டாக்டர். குரு ராமநாதன்
டாக்டர். ரோல்ஃப் ஸ்மீட்ஸ் ஆகியோர் ஊட்டசத்து உணவை பற்றி கூறியதாவது:-
நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் பிற சுவாச பிரச்சினைகள் உள்ள நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஊட்டச்சத்து துணை உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.
சுவாச மண்டல நோய் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி உடலில் நோயெதிர்ப்பு திறனை குறைக்கும்.
இதனால் தசையிழப்பை ஏற்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
எங்கள் தயாரிப்புகள் இந்த இடைவெளியை வழக்கமான சிகிச்சைகளோடு சேர்ந்து மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆதரவை வழங்குகின்றன.
இந்தியாவில் நோயுடன் தொடர்புடைய ஊட்டச்சத்து குறைபாடு என்ற பெரும் பிரச்சனைக்கு தீர்வுகாண ஊட்டச்சத்து துறையில் இத்தயாரிப்புகளின் அறிமுகம் தொடங்கி வைக்கிறது நாப்கான் கருத்தரங்கு நிகழ்வில் இத்தீர்வுகளை அறிமுகம் செய்வதன் வழியாக, சிகிச்சை நெறிமுறைகளோடு ஒருங்கிணைக்கப்படுகிற வலிமை மிக்க ஊட்டச்சத்து தயாரிப்புகள் மூலம் சுகாதாரத்துறை நிபுணர்களின் நம்பிக்கையை பெற உதவுவதே எமது நோக்கமாகும்” என்று தெரிவித்தனர்.
மேலும் பிரிஸ்டைன் பெர்லின் நிர்வாக இயக்குனர் எல்.எம். அயூப் கூறுகையில், “இந்த வெளியீட்டின் மூலம், நாடு முழுவதும் நோயாளிகளை குணமாக்கும் நோக்கத்திற்கு உறுதுணையாகவும், உயர்தர சிகிச்சை பலன்களுக்கு சான்றாகவும் ஊட்டச்சத்து தயாரிப்புகள் விளங்குகிறது என்றார்.