சென்னை, டிச- 20 , சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஸ்டோவ்கிராஃப்ட் நிறுவனத்தின் பிஜியன் பிராண்டிற்காக ‘சூப்பர் குஷ் – 2025 விற்பனையை மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விற்பனை வாடிக்கையாளர்களுக்கு ரூ . 2025/ – மதிப்பில் இதுவரை இல்லாத வகையில் சலுகைகளை வழங்குகிறது . பிஜியன் வழங்கும் உயர்தர புதுமையான உபகரணங்கள் மற்றும் சமையலறை தயாரிப்புகளை 2025 – புத்தாண்டை கொண்டாடும் விதமாக இச்சலுகை வழங்கப்படுகிறது.
அதில் பிரஷர் குக்கர்கள், நான்-ஸ்டிக் பான்கள், தவா, அடுப்புகள், பிளெண்டர்கள், மிக்சர்கள் மற்றும் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்கள் போன்ற அதன் உபகரணங்களும் அடங்கும்.
ஸ்டோவ்கிராஃப்டின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திர காந்தி செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“சுப்பர் குஷ் 2025 விற்பனையானது, 20 வருடங்களுக்கும் மேலாக பிஜியன் பிராண்டின் மீது வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வழியாகும். இந்த விற்பனையானது பிஜியன் பிராண்டிற்குப் பின்னால் உள்ள தரம் மற்றும் புதுமைகளை அனுபவிப்பதோடு, பெரிய சேமிப்பையும் தருகிறது .சூப்பர் குஷ் 2025 விற்பனை இந்த மாதம் தொடங்கப்படும். நாடு முழுவதும் உள்ள 125,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் காம்போக்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் 200 க்கும் மேற்பட்ட பிஜியன் பிரத்தியேக பிராண்ட் விற்பனையகங்களில் பொருட்களைப் வாங்கலாம்
என்று கூறினார்.