கோவை, பிப்.28
கோவை மாவட்டம் சத்தி சாலை கணபதி பகுதியில்
வீடுகளுக்கான பிரீமியம் தர லிப்ட்கள் தயாரிப்பில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் எலைட் எலிவேட்டர்ஸ் நிறுவனம் தனது புதிய எக்ஸ்300 மற்றும் எக்ஸ்300 பிளஸ் லிப்ட்களை கோவையில் அறிமுகம் செய்துள்ளது.அதன் தயாரிப்பு வரிசையில் இந்த புதுமையான லிப்ட்கள், ஆடம்பரம், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவற்றுடன் வீடுகளுக்கான லிப்ட்கள் தயாரிப்பில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து எலைட் எலிவேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான விமல் பாபு கூறுகையில்,
இந்த ஆண்டு இறுதிக்குள் எங்கள் புதிய தயாரிப்புகளின் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 3,000 யூனிட்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். எங்களின் புதிய வரவான எலைட் எக்ஸ்300 மற்றும் எக்ஸ்300 பிளஸ் ஆகியவை வீடுகளுக்கான லிப்ட்கள் பிரிவில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள வீட்டு உரிமையாளர்கள் விரும்பும் புதுமையான, நிலையான மற்றும் ஆடம்பரமான அனைத்து வசதிகளும் அதில் உள்ளது.
வழக்கமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் லிப்ட்களின் வேகத்தை வினாடிக்கு 1 மீட்டர் தூரம் வரை செல்லும் இரட்டிப்பு வேகம் கொண்ட எக்ஸ்300 லிப்ட்டில் டைனமிக் மோட்டாருடன் அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. இதன் கியர் இல்லாத பெல்ட் டிரைவ் ஒரு அமைதியான மற்றும் மென்மையான சத்தமில்லாத பயன்பாட்டிற்கு உறுதி அளிக்கிறது. இதன் விசாலமான கேபின்கள், காந்தத்தால் இயக்கப்படும் தொழில்நுட்பம் மற்றும் கிரீஸ் இல்லாத உதிரிபாகங்கள், உயர் செயல்திறனை வழங்குகிறது.இதை பராமரிப்பது எளிது என்பதால் வீட்டு உரிமையாளர்களின் சிறந்த விருப்பமாக இந்த லிப்ட் இருக்கும்.