சென்னை செப்-07
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், வகையிலும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தலைப்பில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கும் வகையில் மாநில மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருவதாக அந்த கட்சியின் தலைவர் சேக் தாவூத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தி. நகரில்
நடைபெற்றது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ் மாநில முஸ்லிம் தலைவர் சேக் தாவூது கூறியதாவது:-
1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மக்கள் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் அதிகரித்து வருவதாகவும் இதன் காரணமாக தமிழர் ஒற்றுமை சீர்குலைந்து காணப்படுவதாகவும் இந்த நிலையை மாற்றும் வகையில் அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டின் கீழ் தமிழ் மாநில முஸ்லிம் லீக் இந்த மாநாட்டை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த மாநாடு அனைத்து சமுதாய மக்களும் சுமார் 2 லட்சம் பேர்
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து வருவதாகவும் இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் ஏற்படும் மாநாடு நடைபெறும் இடம், தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் மாநாட்டிற்கான குழு தலைவராக மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை எஸ் .சாகுல் ஹமீதை நியமிக்கபட்டார்..
மேலும் இந்நிகழ்ச்சியில்
மாநில அமைப்பு செயலாளர்
எஸ்.ஏ .முகமது மஸ்தான்,
ஆர். மனோஜ்,
எஸ்.முகமது காலித்,
எஸ்.தாவூத் கான்,
தனகோபி,
கே.பிரகாஷ்,
கவியரசன்,எம்.வாசு,
கிதர் மற்றும் மாநில
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.