சிவகங்கை நவ:28
சிவகங்கை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின்
கள ஆய்வுக் கூட்டம்
மாவட்ட செயலாளர்
பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் செம்மலை பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுகவின்
கள ஆய்வு குறித்து பேசினார்கள். கூட்டத்தின் நிறைவில் நத்தம் விசுவநாதன் பேசியதாவது. அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறது. கட்சி தோற்று விட்டால் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கும் என்பது அர்த்தம் அல்ல மக்களின் மனநிலை என்பது மாறிக்கொண்டே வரும் திமுக 13 – ஆண்டுகள் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருந்த கட்சி தான் அந்தக் கட்சி இப்போது ஆட்சிக்கு வரவில்லையா எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உறுதியாக ஆட்சியைப் பிடிக்கும் . அதில் எந்த மாற்றமும் இல்லை அதேசமயம் 2026 தேர்தலின் போது திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் போய்விடும் என்பது உறுதி வரும் தேர்தலில் அதிமுகவிற்கு கூட்டணி தேவை தான் அதே சமயம் கூட்டணி இல்லாவிட்டாலும் அதிமுக வெற்றி பெறும் என்பதற்கு வரலாறு உண்டு அதிமுக மக்களுக்கு சாதனை செய்த கட்சி ஆனால் திமுகவில் தந்தையை மகன் பாராட்டுவதும் மகன் தந்தையை பாராட்டுவதுமாக மாறி மாறி திமுகவில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் யாரும் இவர்களை பாராட்டவில்லை . திமுக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு இப்போது ஆட்சியை பிடித்திருக்கிறார்கள். ஆனால் பொதுமக்களோ இந்த ஆட்சி மீது மிகுந்த வெறுப்பில் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசுகையில் மின்சாரம் கட் ஆனது அப்போது திராவிட மாடல் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் எப்போது மின்சாரம் வரும் எப்போது மின்சாரம் போகும் என்றே தெரியாது. இன்றைய தமிழக முதல்வருக்கு நிர்வாக திறமை என்பது இல்லை தமிழக மக்களுக்கு நல்லதொரு திட்டங்களை கொண்டு வர முடியவில்லை என்று பேசினார்.
இந்த கூட்டத்தில்
அதிமுக ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.