தென்காசி வடக்கு மாவட்டம் திமுக மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒன்றிய நகர , பேரூர் கழக மாணவ அணி நிர்வாகிகள் நேர்காணல் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் வரவேற்றார். இதையடுத்து ஒன்றிய, நகர, பேரூர் பகுதியில் புதிதாக ஒரு அமைப்பாளர், 1 பெண் உள்ளிட்ட 5 துணை அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்காணலை மாணவரணி மாநில தலைவர் ராஜிவ்காந்தி, மாநில துணைச்செயலாளர்கள் அதலை செந்தில்குமார், பூரணசங்கீதா ஆகியோர் நடத்தினர். இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன், ஒன்றியச் செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், சேர்மத்துரை, வெள்ளத்துரை,நகரச் செயலாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர் மாரிமுத்து, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சதிஷ்குமார்,
வீரமணிகண்டன், தினேஷ், முத்துலட்சுமி, நடித்தார் மணிகண்டன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.