தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக பொறியாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகளுக்கான பொறுப்புகளுக்கு பொறியாளர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
நேர்காணலில் பிஇ, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற பொறியியல் துறை சார்ந்த படிப்புகளை நிறைவு செய்துள்ள, மற்றும் படித்துக் கொண்டிருக்கின்றவர்கள் தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் உள்ள 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன் சான்றிழ்களை சாிபாா்த்து தகுந்த ஆவணங்கள் உள்ளவர்களை தோ்வு செய்தாா்.
நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, வழங்கறிஞர் அணி அமைப்பாளா் செல்வக்குமாா், ஓன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, இளையராஜா, புதூா் சுப்பிரமணியன், மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனா்.