நாகர்கோவில் அக் 13,
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை அறிவிப்பு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது :-
வீட்டில் இருந்தபடியே ஒரு நாளைக்கு ரூபாய் 10,000 வரை சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான ஒரு குறுஞ்செய்தி வரும். அத்துடன் ஒரு டெலெக்ராம் லிங்க் கொடுக்க பட்டிருக்கும். அதன் உள்ளே சென்றால் எளிமையான டாஸ்க் கொடுக்கப்படும். 500, 1000 என முதலீடு செய்ய ஆரம்பித்து அதில் சில நூறு ரூபாய் நமக்கு வருமானம் வரும். பின்னர் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்ய கூறுவார்கள். நமக்கு தனியாக ஒரு லிங்க் கொடுக்கப்படும். அதில் நீங்கள் முதலீடு செய்த பணம் லாபத்துடன் சேர்த்து ஒரு பெரிய தொகையாக காண்பிக்க படும். ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியாது. ஏன் என்று கேட்டால் மீண்டும் சில லட்சங்கள் பணம் முதலீடு செய்தால் மொத்தமாக எடுத்து விடலாம் என கூறுவார்கள். ஆனால் கடைசிவரை அந்த பணத்தை எடுக்க முடியாது. நம்மிடம் இருந்து இனி பணம் வராது என தெரிந்த உடன் அந்த லிங்க் எக்ஸ்பிரி ஆகிவிடும். எனவே இது போன்ற குறுஞ்செய்திகளை நம்பி ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றும் டிரேடிங் மூலம் குறைந்த முதலீட்டில் பல மடங்கு பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி அவர்கள் கொடுக்கும் லிங்க் அல்லது ஆப் இல் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்ய வைப்பார்கள். பார்ட் டைம் ஜாப் ஸ்கேம் உள்ளது போல் இதற்கும் நமக்கென்று தனியாக ஒரு யூசர் நேம் பாஸ்வேர்டு அல்லது லிங்க் கொடுக்கப்படும். அதில் நீங்கள் முதலீடு செய்த பணம் லாபத்துடன் சேர்த்து ஒரு பெரிய தொகையாக காண்பிக்க படும். ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியாது. ஏன் என்று கேட்டால் மீண்டும் சில லட்சங்கள் பணம் முதலீடு செய்தால் மொத்தமாக எடுத்து விடலாம் என கூறுவார்கள். ஆனால் கடைசிவரை அந்த பணத்தை எடுக்க முடியாது. நம்மிடம் இருந்து இனி பணம் வராது என தெரிந்த உடன் அந்த லிங்க் எக்ஸ்பிரி ஆகிவிடும்.
எனவே மேற்கண்ட இணையதள மோசடிகளை நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படியும் இணையதள மோசடிகள் மூலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.