திருப்பத்தூரில் உலக மகளிர் தினவிழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு பங்கேற்று 464 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 6253 பயனாளிகளுக்கு 45 கோடி 35 லட்சம் ரூபாய் வங்கி கடன் உதவி வழங்கி சிறப்பித்தார்
திருப்பத்தூர்:மார்ச்:9, திருப்பத்தூர் மாவட்ட தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து விழா பேருரை ஆற்றினார். மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையுரை ஆற்றினார். மேலும் காணொளி கட்சியின் வாயிலாக அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்ற உலகமகளிர் தின விழாவில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதன் தொடர்ச்சியாக
திருப்பத்தூர் அடுத்த பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு பங்கேற்று 464 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 6253 பயனாளிகளுக்கு 45 கோடியே 35 லட்சம் வங்கி கடன் வழங்கி சிறப்பித்தார்.
மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப., வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் தனபதி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வனாதன், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சூரியகுமார், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா தண்டபாணி, ஒன்றிய குழு உறுப்பினர் கலைவாணி மற்றும் ஒன்றிய தலைவர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் பங்கேற்றனர்.