தஞ்சாவூர். டிச.16.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மற்றும் குடந்தை மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் இணைந்து தமிழ் கல்வெட்டுகளில் கலைகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தியது.
கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறையின் தலைவர் பவானி அனைவரையும் வரவேற்றார் சிறப்பு விருந்தினராக துணைவேந்தர் (பொறுப்பு)சங்கர் கலந்து கொண்டு கருத்தரங்க நூலினை வெளியிட்டு பேசினார்.
விழாவில் தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) தியாகராஜன் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் தகைசால் பேராசிரியர் ஜெயக்குமார் ,ஜான்சன், விண் மைய விஞ்ஞானி கணேசன், இலங்கை பேராதனை பல்கலைக் கழக விரிவுரையாளர் ஜெயசீலன், சிங்கப்பூர் ஆங்கிலோ சீனத் தன்னாட்சி பள்ளித்தலைவர் ஹாஜா அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்
கருத்தரங்கில் 40க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இதில் இந்தியா மற்றும் வெளிநாடு களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராள மானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை பேராசிரியர் துளசேந்திரன் தொகுத்து வழங்கினார்.
நிறைவாக பேராசிரியர் கணேச மூர்த்தி நன்றி கூறினார்.