தென்தாமரைகுளம்., அக். 4
கன்னியாகுமரியில் சர்வதேச அளவில் கல்வியாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது .விழாவுக்கு கருத்தரங்க அமைப்பாளர் பேராசிரியர் ஜோசப் ரூபட் தலைமை தாங்கினார். விஜயவாடா கே .எல். பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட் எட்வின் செஸ்டர் வாழ்த்தி பேசினார். கேரள பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி பேசினார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தாகல்லூரி வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி கருத்தரங்க ஆய்வு மலரை வெளியிட்டார் அதை அல்போன்சா கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் ஆர். சிவனேசன் பெற்றுக் கொண்டார். பேராசிரியை ஷீலா நன்றி கூறினார். கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள்,ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் சாதனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.