ஊட்டியில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் தாம்பரத்தை சேர்ந்த மாணவர்கள் 10 தங்கம் கோப்பை உள்பட 14 கோப்பைகளை கைப்பற்றிப் சாதனை படைத்துள்ளனர்.
ஊட்டியில் ஒகினவா கோஜூ ரியோ சார்பில் 2 ம் ஆண்டு
சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, ஸ்ரீலங்கா, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மாநிலங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தாம்பரம் கிக்ஸ் அண்ட் பஞ்சஸ் கராத்தே பயிற்சி மையத்தை சேர்ந்த ரென்ஷி கார்த்திகேயன் மற்றும் சென்சாய் மிருதுலா தலைமையில் 14 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் சஞ்சய் ஷிவ், சைலேஷ், லிமர் ராகவ், நிவேதியன், ஜெஸ்வித்தா, ஆரோக்கி ஜெயின், ஹரி நிக்லேஷ், வைபவ், மூர்ஷித்தா, சாய்சரண் ஆகியோர் தங்ககோப்பையும்,
ரோஷன், கரண், விதிஷா ஜெயின், வைசாலி ஆகியோர் வெள்ளி
கோப்பையும்வென்று சாதனை படைத்தனர்.
மொத்தம் 14 மாணவர்கள் 10 தங்ககோப்பைகளும், 4 வெள்ளி கோப்பையும் வென்று சென்னை திரும்பினர். பதக்கம் வென்ற மாணவர்களுக்கு சென்னை தாம்பரம் கிக்ஸ் கிக்ஸ் அண்ட் பஞ்சஸ் கராத்தே பயிற்சி மையத்தில் நடந்த பாராட்டு விழாவில் பயிற்சி மையத்தின் இயக்குனர் ரென்ஷி வனிதா கார்த்திகேயன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் கிக்ஸ் கிக்ஸ் அண்ட் பஞ்சஸ் கராத்தே பயிற்சி மையத்தில் நிறுவனர் ரென்ஷி கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசும்போது சென்னை போன்ற பெருநகரில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால், குழந்தைகள் தனிமையிலேயே வளர்வதால், குழந்தைகள் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளமுடியாமல் திணறுகின்றனர். எனவே கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலையை கட்டாயம் மாணவர்கள் கற்றுகொள்ளும்போது, அவர்கள் எதையும் சாமளிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள் என தெரிவித்தார்.