சென்னை, நவ – 28,
இந்திய பொறியியல் தொழில் துறை சர்வதேச கண்காட்சி மற்றும் கருந்தரங்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் சந்தேச அளவில் தொழில்துறையில் சிறந்து விளங்கும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்குபெறுகின்றன.
இ.இ.பி.சி. இந்தியாவின் தலைவர் பங்கஜ் சந்தா செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று துவக்கி வைத்த இ.இ.பி.சி கண்காட்சியில்
300 இந்திய கண்காட்சி பங்கேற்பாளர்கள், 40 நாடுகளைச் சேர்ந்த 300 பேராளர்கள், 2,000க்கு மேற்பட்ட பிசினஸ் டூ பிசினஸ் சந்திப்புகள், 10,000க்கு மேற்பட்ட பார்வையாளர்கள், மூன்று நாட்களிகளில் நடக்கவிருக்கும் 12-13 அறிவுசார் அமர்வுகளில் 30 பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர் . ஐ.இ.எஸ். எஸ். 12 கருப்பொருள்
வரும் 2030க்குள் கார்பன் உமிழ்வே இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்கோடு செயல்படும் இந்திய அரசின் நோக்கத்தை ஒட்டி, ஸ்மார்ட் சஸ்டெய்னபிப் எஞ்னிரிங் என்பதை முன்னிலைப்படுத்தி, இந்த ஐ.இ.எஸ்.எஸ் 12 கண்காட்சி நடைபெறவுள்ளது. இ.இ.பி.சி இந்தியாவின் பசுமை முயற்சிகளை விளக்கும் விதமாக, இ.இ.பி.சி இந்தியா’ஸ் கிரீன் இனிஷியேட்டிவ்ஸ் என்ற ஆவணப்படம் காட்சிப்படுத்தப்படுவதோடு, முதல்முறையாக இ.இ.பி.சி. இந்தியா கிரீன் விருதுகளும் வழங்கப்படுகின்றன.
பொறியியல் உற்பத்தி முறையில் பசுமையைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்களைக் கெளரவிக்கும் விதமாக முதன்முறையாக ஒன்பது இந்திய நிறுவனங்களுக்குப் பசுமை விருதுகள் வழங்கப்படுவதோடு, 7 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.