திருச்சி செப் 05, பண்டிகை காலம் விரைவில் நெருங்கி வரும் நிலையில் அதற்கு முன்னதாக வாடிக்கையாளர்கள் வசதியாகவும் எளிதாகவும் நிதி ஆதாரங்களை பெறுவதற்கு உதவும் நோக்கத்தோடு தமிழ்நாட்டில் கடன் உள்ள நாட்களுக்கு மட்டுமே வட்டி’ (‘Jitne Samay ka Loan Utne ka hi Byaj’) என்ற முன்னெடுப்பு திட்டத்தை ஶ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த புதிய திட்டம் குறித்து
ஶ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட்-ன் சந்தையாக்கலுக்கான செயலாக்க இயக்குநர் எலிசபெத் வெங்கடராமன் பேசுகையில் தேவைப்படுகிறபோது தங்களது தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுவதன் மூலம் தங்களின் பல்வேறு நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு வழக்கமான செயல் முறையாக தங்கம் மீதான கடன்கள் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை வாடிக்கையாளர்களுடனான எங்களது கலந்துரையாடல்களின் வழியாக நாங்கள் கண்டறிந்திருக்கிறோம்
மேலும் தங்கம் மீதான எளிதான கடன் வசதி ஒரு அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது அதிக பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ள இக்கடன் வழிமுறை குறிப்பாக வரவிருக்கும் பண்டிகை காலத்தின் போது பெரிதும் உதவுவதாக இருக்கும் என்று கூறினார்.