நாகர்கோவில் மே 30
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு நெல் சாகுபடி முறைகள் உள்ளன. கன்னி பூ என்று அழைக்கப்படும் ஆண்டின் முதல் சாகுபடி பணிகள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் தொடங்கும். இந்த காலகட்டத்தில் தான் தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கும். சென்னை வானிலை ஆய்வு மையம் கேரளாவில் இந்த ஆண்டு இந்த மாதம் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் கேரளாவை ஒட்டி உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளாவை போன்றே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்று இரவு விடிய விடிய நாகர்கோவில் ஆரல்வாய்மொழி இறச்சகுளம் பூதப்பாண்டி பேச்சிப்பறை பெருஞ்சாணி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சாரல் மழை தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது தென்மேற்கு பருவமழை காலத்தில் தொடங்க வேண்டிய முதல் பருவ நெல் சாகுபடி பணிகளை நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளனர். நெல் வயல்களில் டிராக்டர் கொண்டு நிலங்களை உழுது பக்குவப்படுத்தும் பணிகளில் இறங்கி உள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 7,000 ஹேக்டேடர் மேல் உள்ள நெல் வயல்களிலும் சாகுபடி பணிகள் தொடர்ந்து தொடங்க இருக்கின்றன. அண்மையில் பெய்த மழையால் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாசன குளங்களில் நீர் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் தேவையான தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். நேற்று இரவு விடிய விடிய மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது மாவட்டத்தில் அதிகபட்சமாக பேச்சிபாறையில் 52 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது இதேபோன்று திற்பரப்பு, பாலமோர், ஆகிய பகுதிகளில் தலா 41 மில்லி மீட்டரை மழை பதிவாகியுள்ளது இதே போன்று பேச்சிபாறை, பெருஞ்சானி அணைகளுக்கு வினாடிக்கு 1002 கண்ணாடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.
குமரியில் கன்னிப் பூ சாகுபடி பணி தீவிரம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics