நம் தாய் திருநாடாம் தமிழக மண்ணில் பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள ஒவ்வொரு குழந்தையின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தி அனைவரும் சரியான ஊட்டச்சத்து நிலையில் உள்ளனர் என்பதை உறுதி செய்து ஊட்டச்சத்தை குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.
1975 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 106-வது பிறந்தநாளில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் பேரில் 33 வட்டாரங்கள் முதன்முறையாக தொடங்கப்பட்டது தமிழகத்தில் சென்னை (நகர்ப்புறம்) நிலக்கோட்டை (கிராமப்புறம்) மற்றும் தளி (பழங்குடி) ஆகிய மூன்று வட்டாரங்களில் முன்மாதிரி திட்டமாக தொடங்கப்பட்டு தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை எட்டுவதே நமது மாநிலத்தின் கொள்கையாகும்.
தமிழ்நாட்டினை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு (3 வயதுக்கு மேல்), குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்தினை உறுதிப்படுத்துதல், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான உடல், அறிவாற்றல் மொழி, மன எழுச்சி, சமூக, மற்றும் உணர்ச்சி வளர்ச்சியை வளர்ப்பது மற்றும் 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்துதல், குழந்தை பருவ பராமரிப்பு, வளா்ச்சி மற்றும் கற்றல், தாய் மற்றும் வயதுவந்தோர் பாதுகாப்பு உட்பட உகந்த ஊக்குவிப்பு வழங்குதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும். எனவே தான், தற்போது 76 ஆயிரத்து 705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் திட்டமாக உள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் எடை குறைவான குழந்தைகள் மற்றும் மிதமான எடை குறைவுள்ள குழந்தைகளுக்கு முதல் கட்டமாக ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முலம் 77.3 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
ஊட்டச்சத்தினை உறுதி செய் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தினை 15.11.2024 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரணவாசி குழந்தைகள் மையத்தில் வைத்து துவங்கி வைத்தார்கள். இது வரை தென்காசி மாவட்டத்தில் உள்ள எடை குறைவாக உள்ள 1302 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்தினை உறுதி செய் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற தாய்மார்கள் தெரிவித்ததாவது,
மோனிஷா, தென்காசி.
என் பெயர் மோனிஷா. என் கணவருடைய பெயர் ராஜன். என் குழந்தையின் பெயர் இதழினி. நாங்கள் மேல பாறையடித்தெருவில் வசித்து வருகிறோம். எங்கள் குடும்பம் மிகவும் பின்தங்கிய குடும்பம். என்னுடைய கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எனக்கு குழந்தை பிறக்கும் போது எடை குறைவாகப் பிறந்ததது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மூலம் எனக்கு இணை உணவு கொடுக்கிறார்கள். இதனை நான் கொழுக்கட்டையாகவும் உருண்டையாகவும் பாயாசமாகவும் செய்து சாப்பிட்டு வருகிறேன். இதனால் என்னுடைய எடையும் அதிகரித்துள்ளது. என் குழந்தையின் எடையும் ஒவ்வொரு மாதமும் எடை அதிகரித்து வருகிறது. தற்போது எனக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் எனக்கும் என் குழந்தைக்கும் எடை அதிகரித்துள்ளது. என் போன்ற ஏழைப் பெண்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மிகவும் நன்றி.
ராம் ஜோதிகா, தென்காசி.
என் பெயர் ராம் ஜோதிகா. என் கணவரின் பெயர் ஆனந்த்ராஜ். என் குழந்தையின் பெயர் பேபி. நாங்கள் மேல பாறையடித்தெருவில் வசித்து வருகிறோம். எங்கள் குடும்பம் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பம். என்னுடைய குழந்தை பிறக்கும் போது நானும் எடை குறைவாக இருந்தேன். என் குழந்தையும் எடை குறைவாகப் பிறந்ததது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மூலம் எனக்கு இணை உணவு கொடுக்கிறார்கள். இதனை நான் கொழுக்கட்டையாகவும் உருண்டையாகவும் பாயாசமாகவும் செய்து சாப்பிட்டு வருகிறேன். இதனால் என்னுடைய எடையும் அதிகரித்துள்ளது. என் குழந்தையின் எடையும் ஒவ்வொரு மாதமும் எடை அதிகரித்து வருகிறது. தற்போது எனக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு ஊட்டச்சத்து கிடைப்பதால் என் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. என் குழந்தைக்கும் உடல் எடை அதிகரித்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முக.ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு என்னுடைய நன்றியை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம்.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) ராமசுப்பிரமணியன்.
தென்காசி