சுசிந்திரம் மார்ச் 18
2025-ம் ஆண்டிற்க்கானபறவைகள் கணக்கெடுப்பு பணி நமது குமரி மாவட்டத்திலும் மார்ச் 09 மற்றும் 16 -ம் தேதி நடைபெற்றன. பறவைகள் கணக்கெடுப்பு குறித்து குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின க்காப்பாளர் பிரசாந்த் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுத்தோறும் கோடை காலத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு செய்வது வழக்கம். அதே போல் நமது குமரி மாவட்டத்திலும் இந்தாண்டு மார்ச் 09 -ம் தேதி ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு சுசீந்திரம், தேரூர், தத்தையார் குளம், புத்தேரி, புத்தளம், சுவாமி தோப்பு, முட்டம், இறச்சகுளம், இராஜாக்கமங்கலம் என சுமார் 25-க்கு மேற்பட்ட இடங்களில் ஈரநிலம் மற்றும் சதுப்பு நில பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடை பெற்றது. அதனை தொடர்ந்து 16-ம் தேதியன்று நமது மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் , வேளிமலை, குலசேகரம், களியல் ஆகிய ஐந்து வனச்சரக பகுதிகளில் உள்ள புறநகர் மற்றும் வனப்பகுதிகளிலும் வாழும் பறவை இனங்கள் குறித்தும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. இக்கணக்கெடுப்பு பணிகளுக்காக துறை சார்ந்த பணியாளர்கள் 65, தன்னார்வலர்கள் என சுமார் 75 நபர்கள் ஈடுப்படுத்தப்பட்டார்கள். என அவர் தெரிவித்தார். இந்நிகழ்வானது மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் மற்றும் பயிற்சி உதவி வனப்பாது காவலர் ஆலோசனையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் செய்திருந்தார்.