கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் வட்டாரம் வெள்ளமடை கிராமத்தில் வேளாண்மை துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் சிறுதானிய பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் பண்ணை பள்ளி நடைபெற்றது. ஆறு வகுப்புகளாக நடைபெறும் இப்ப பண்ணை பள்ளியில் உழவு முதல் உணவு வரையிலான தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் பட விளக்க உரையாகவும் எடுத்துரைக்கப்படுகிறது.
முதல் வகுப்பான இன்று மண் மாதிரி சேகரித்தல் மண்வள பாதுகாப்பு மண் மாதிரி அறிக்கை கோடை உழவின் முக்கியத்துவம் மண் மாதிரி ஆய்வறிக்கையை அறிந்து உரம் இடல் போன்ற தொழில்நுட்பங்கள் பற்றி ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் மோகன்ராஜ் சாமுவேல் அவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
நிலத்தேர்வு விதை தேர்வு நிலம் தயாரித்தல் விதை நேர்த்தி போன்ற தொழில்நுட்பங்களை பற்றி கோவை காரமடை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சுரேஷ் அவர்கள் விவசாயிகளிடம் கூறினார்.
சர்க்கார் சாமகுளம் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் நமதுல்லா அவர்கள் விதை நேர்த்திக்கு தேவையான நுண்ணுயிர்கள் மானியத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றன எனவும் சிறுதானிய பயிர்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன எனவும் வேளாண் துறையில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார். இப்ப பண்ணை பள்ளியில் சர்க்கார் சாம குல வட்டார வேளாண்மை உதவி அலுவலர் பாண்டிச்செல்வி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
பண்ணை பள்ளிக்கான ஏற்பாடுகளை ஆத்மா அலுவலர்கள் சரண்யா மற்றும் தங்கமணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பண்ணைப் பள்ளியில் இறுதியில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. பிரதான் மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான பிரசுரங்கள் வழங்கப்பட்டன.