திருப்பூர் ஜூலை: 3
மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் மரு. விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி ,ஆறுச்சாமி ,
கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடக்கிய குழு திருப்பூர் ரோடு,மேற்கு பல்லடம் ,பஸ் நிலையம் எதிரில் மற்றும் திருச்சி ரோடு ஆகிய பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகள் ஆய்வு செய்யப்பட்டது . ஆய்வின் போது உணவக உரிமையாளர்களுக்கு உணவு பொருள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கவும், தரமான உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அறிவுறுத்தப்பட்டது .
சமையலறை பரிமாறும் இடம் அனைத்து பகுதிகளிலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் உணவு கழிவுகளை மூடிய குப்பை தொட்டியில் சேகரித்து சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் எனவும்,
உபயோகிக்கும் சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்
கூடாது எனவும், உணவுப்பொருட்கள் பார்சல் செய்வதற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் கேரிபேக்குகளை பயன்படுத்தக் கூடாது எனவும், கொள்முதல் செய்யப்படும் அனைத்து மூலப் பொருட்களின் ரசீதுகள் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் , உணவு பொருட்கள் தயாரிக்க செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் , குளிர்சாதன பெட்டியை சரியான வெப்பநிலையில் உணவு பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டது.
உணவுப் பொருட்கள் கையாள்பவர்கள் தன் சுத்தம் பேண அறிவுறுத்தப்பட்டது.
இவ்விதிமுறைகளை பின்பற்றாத ஆறு கடைகள் மீது ரூபாய் 19000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரண்டு உணவகங்கள் தற்காலிகமாக விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக மூன்று கடைகளுக்கு மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு
கடைகள் மூடப்பட்டது.