பரமக்குடி,மே.29:
ராமநாதபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட சாலை பணிகளை, கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை துறை அலுவலகங்களில் செயல்பட்டு வரும் திட்ட பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நடந்து வரும் நெடுஞ்சாலை துறை பணிகளை ஆய்வு செய்தனர். பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட சத்திரக்குடி – பூசேரி சாலை கி.மீ 1/0 – 4/0 வரை ஒரு வழி தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணியை நபார்டு கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
பரமக்குடி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட சத்திரக்கடி – பூசேரி சாலையானது குறுகலாக இருந்ததால் விவசாய வாகனங்கள் பள்ளி வாகனங்கள் , அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்டவை அதிக அளவில் இச்சாலையில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் சாலையை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த நிதியாண்டில் 3000 மீட்டர் நீளத்திற்கு ஒரு வழி தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்கு தமிழக அரசு ரூ. 4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை விரிவாக்கம் செய்து தார் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது . இந்த சாலையின் தரம், தன்மை குறித்து கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, கோட்டப் பொறியாளர் ( கிராமச்சாலைகள் )சந்திரசேகரன், கோட்டப்பொறியாளர் சந்திரன் (நெடுஞ்சாலை) , ராமநாதபுரம் உதவி கோட்டப்பொறியாளர், உதவிக்கோட்டப் பொறியாளர் கண்ணன், உதவிப் பொறியாளர்கள் சிவக்குமார், பிரபாகரன் மற்றும் தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இந்த ஆய்வறிக்கையை நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனருக்கு அனுப்பி வைத்தனர்.
பட விளக்கம்
பரமக்குடி நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட சத்திரக்குடி பூசரி சாலை பணிகளை, கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.