ஜன:22
முதலமைச்சர்
திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டப்பணிகள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகராட்சி கோவில்வழி பேருந்து நிலையம் கட்டும் பணி, திருப்பூர் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
திருப்பூர் மாநகராட்சி, கோவில்வழியில் 4.85 ஏக்கர் பரப்பளவில் தரை தளம் 3,880 ச.மீ, முதல் தளம் 2,745 ச.மீ, இரண்டாவது தளம் 1,200 ச.மீ என மொத்தம் 7,825 சதுர மீட்டர் பரப்பளவில் 42 பேருந்து நிறுத்துமிடம், 35 கடைகள், 550 இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், உணவகம், தாய்மார்கள் உணவளிக்கும் அறை (பாலூட்டும் அறை), வணிக வளாகம், பயணச்சீட்டு மையம், காத்திருப்பு கூடம், பதிவு அலுவலகம், அவசர சிகிச்சை மையம், நிர்வாக அலுவலகம், ஏடிஎம் மையம், தகவல் மையம், ஓட்டுனர் ஓய்வு அறை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம், உள் மற்றும் வெளி நுழைவாயில், ஒலிபரப்பு அறை, சிசிடிவி கண்காணிப்பு அறை, காவல்துறை பாதுகாப்பு அறை, தானியங்கி படிகட்டுகள், தொழிலாளர் அறை, தங்கும் அறை, மின்சார வசதி, சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் வசதி, தீதடுப்பு வசதி உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.34.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், உகாயனூர் ஊராட்சி, பொல்லிகாளிபாளையத்தில் 3.25 ஏக்கர் பூமிதான நிலங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காலம்பாளையத்தில் திருப்பூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்
இந்த ஆய்வின் போது, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி உதவி ஆணையர் வினோத், மாநகராட்சி தலைமை பொறியாளர் (பொ) செல்வநாயகம், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மயில்சாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.