திருப்பூர், நவ.23- திருப்பூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை உணவகத்தில் உணவின் தரம் சரியாக உள்ளதா? என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அரசு மருத்துவமனையில் ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் உணவகங்கள் மற்றும் விடுதிகளில் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற் கொள்ள மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் பிரபு, ஆறுச்சாமி, சிரஞ்சீவி ஆகியோர் அடங் கிய குழுவினர்.
திருப்பூர் மருத்துவக் கல்லூ ரியில் மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் செவிலி யர்கள், பயிற்சி மருத்துவர்கள் போன்றோருக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா
என உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
ஆய்வு செய்தனர். அத்துடன் உணவு தயாரிப்புக்கூடம், மூலப்பொருட்கள், இருப்பு அறை சரியாக பராமரிக்கப்படுகிறதா?. கொள்முதல் செய்யப்பட்ட உணவுபொருட்களில் உள்ள லேபிள் விவரங்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர் ணய சட்டத்தின் வழிகாட்டு தல்படி உள்ளதா? என்றும், தரமான பொருட்களை கொண்டு, சுகாதாரமாக உணவுதயாரித்து நோயாளிக ளுக்கு வழங்கப்படுகிறதா?
பணியாளர்களுக்கு மருத்துவ சான்று
மூலப் பொ ருட் களை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பெறவேண் டும்.பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் உணவு பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்களை தனித்தனியே இருப்புவைக்க வேண்டும். சமையல் கூடத் தின் அனைத்து பகுதிகளையும் நன்கு சுகாதாரமாக பரா மரிக்கவும்,
மற்றும் பணியாளர்கள் தலைக்கவசம். கையுறை, மேலங்கி போன்றவை அணிந் திருக்க வேண்டும் என்று
அறிவுறுத்தினார்கள்.
பணியாளர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை தொற்று நோய்கள் ஏதும் இல்லை என்று மருத்துவ சான்று பெற வேண்டும். உணவு தயாரிக்க பயன்படுத்தும் தண்ணீர் 6 மாதத்துக்கு ஒருமுறை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ண யத்தால் அங்கீகரிக்கப்பட்ட / பரிசோதனை கூடத்தில் முறையாக பரிசோதனை செய்ய வேண்டும். குளிர்சாதன பெட்டி சரியான வெப்ப நிலை பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும். சமைத்த உணவுகளை உணவு மாதிரி எடுத்து 24 மணி நேரம் பாது காப்பாக வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மத்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் ஆய்வு செய் யப்பட்டு சுகாதாரமான உணவு வழங்கும் வளாகம் என சான்று வழங்கப்பட்டுள் ளது. உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்கள்.