தஞ்சாவூர் ஜூன் 26
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்ச ரின் காலை உணவு திட்டத்தின் சமையல் கூடத்தினையும், ஒருங்கிணைந்த குழந்தை நேயப் பள்ளிகளின் கட்டமைப்பு திட்டம் (2023- 24 ) ரூபாய் 32.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், பார்வையிட்டு பணிகளை விரைந் து முடிக்குமாறு சம்பந்தப் பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்
கலைஞர் கனவு இல்லம் திட்டத் தின் கீழ் புதிதாக வீடு கட்டும் திட்ட பயனாளி திருமதி பானு என்பவரி ன் தற்போது குடியிருக்கும் கூரை வீட்டை பார்வையிட்டார்.
பின்னர் சக்கராப்பள்ளி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற் கொண்டார்.
ஆய்வின்போது உதவி கலெக்டர் உத்கர்ஷ் குமார் ,கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.