திருவட்டாறு, பிப்- 19
மாத்தூர் தொட்டிப்பாலம் நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவப்படுத்துடன் கூடிய தொட்டிப்பாலம் விவரங்கள் அடங்கிய கல்வெட்டை கடந்த 10-ம் தேதி மர்ம நபர்கள் உடைத்தனர். இதை அடுத்து காங்கிரஸ் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டது. திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் கிடைக்காததால், உடைத்த மர்ம நபர் இதுவரை அடையாளம் காண முடியவில்லை.
இந்த நிலையில் அடுவிக்கரை ஊராட்சி சார்பில் உடைக்கப்பட்ட கல்வெட்டு மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மாத்தூர் தொட்டி பாலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கல்வெட்டு அமைக்கும் பணியை பொது பணித்துறை செய்ய முன் வந்தது.
ஏற்கனவே இருந்த இடத்தில் காங்கிரிட் சுவர் எழுப்பி அதன் முகப்பில் கிரானைட் கல்லில் காமராஜர் உருவத்துடன் மாத்தூர் தொட்டி பல விவரங்கள் அடங்கிய கல்வெட்டு நேற்று நிறுவப்பட்டது.