கலசலிங்கம் பல்கலையில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்ட இரண்டு நாள் முகாம்
————-
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில் , தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளி கல்வித்துறை, மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து
பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்ட இரண்டு நாள்முகாம்
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்றது .
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து
மாணவர் அணிகள் தங்களது புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் முன் மாதிரிகள் செய்த 20 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட திட்ட மேலாளர் சத்யா, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா , கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோர், கலந்து கொண்டு,தேர்வான 20 குழுவில் உள்ள 86 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி, 20 செயல் வடிவங்களை மதிப்பீடு செய்து ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் தேர்வானவர்களுக்கு இறுதி போட்டி. சென்னையில் நடைபெறும்.
நிறைவு விழாவில், அனவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட சுற்றுச்சூழல் ,மாவட்ட திட்ட மேலாளருடன் இணைந்து பல்கலை வணிகக் காப்பகத் தலைவர் டேனி முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.