கொல்லங்கோடு, பிப்- 19
கொல்லங்கோடு அருகே சூரிய கோடு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (72) இவர் வீட்டின் அருகே உள்ள மெது கும்மல் கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக வேலை செய்த போது பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நந்தகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு 33 வருடங்களாக நடந்து, தற்போது கடந்த 14ஆம் தேதி நந்தகுமாருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
இதை தனது மனைவி சுலோஜனா பாய் (69) என்பவரிடம் நந்தகுமார் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நந்தகுமார் மனைவியை கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். மேலும் மனைவிக்கு கொலை மிரட்டல் முடித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். தாக்குதலில் காயமடைந்த சுலோஜனா பாய் குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக நந்தகுமார் மகள் சவிதா (42) கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர்.