திருமங்கலம் ஜூன்.11 திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவியர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு துவங்கியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள கப்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முதலமாண்டு மாணவ, மாணவியர்கள் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு துவங்கியது. முதல் நாளான நேற்று பிஎஸ்சி கணிதம் மற்றும் பிஏ ஆங்கிலம் ஆகிய இரண்டு துறை பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் லட்சுமி கணிதவியல் துறை பேராசிரியர் ஹரிநாராயணன், வணகவியல் கெளரவ விரிவுரையாளர் சின்னசாமி தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் சுமதி ஆகியோர் மாணவ, மாணவியர்களிடம் சான்றிதழ்களை சரி பார்த்து கலந்தாய்வினை நடத்தினர்.
தொடர்ந்து இன்று பி.காம் பாடத்திற்கும் நாளை 12 ம் தேதி பிஏ தமிழ் பாடத்திற்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மேலும்
மாணவர்கள் சேர்க்கை நடைபெற இருப்பதால் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் போது மாணவ மாணவியர்கள் தங்களது அசல் மற்றும் சான்றிதழ்களான மாற்றுச் சான்றிதழ் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் சாதிசான்றிதழ் ஆதார் கார்டு மற்றும் நன்நடத்தை சான்றிதழ்களை உடன் எடுத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர் டாக்டர் லட்சுமி தெரிவித்துள்ளார்.