சென்னை, பிப்-07,
சர்வதேச தரத்துடன் புகழ் பெற்று விளங்கும் சாய் பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா நடை பெற்றது . அதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இன்போசிஸ் முன்னாள் தலைவரும் நிறுவனருமான நாராயணமூர்த்தி , நீதியரசர் பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சாய் பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் அனுபாசிங் மற்றும் சாய் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான கே.வி.ரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற
இப்பட்டமளிப்பு விழாவில் மணிபால் குளோபல் எஜுகேஷன் தலைவர் மோகன்தாஸ், அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ப்ரித்தா ரெட்டி , கோழிக்கோடு ஐ.ஐ.எம் தலைவர் டெபாஷிஷ் சட்டர்ஜி, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.என். வெங்கடாச்சலய்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் 58 மாணவர்கள் இவ்விழாவில் பட்டம் பெற்றனர். இதில் 49 மாணவர்கள் தக்ஷா ஃபெல்லோஷிப் திட்டத்தை சேர்ந்தவர்கள் . தொழில்நுட்ப சட்டம் கொள்கை மாறுபாடுகளுக்கான தீர்வு சட்டம் ஆகியவற்றில் சிறப்பு தகுதி பெற்று முதுகலை டிப்ளமோ பட்டம் பெற்றார்கள் .
ஒழுங்குமுறை ஆய்வுகள் படிப்பை சேர்ந்த 5 மாணவர்கள் எல்.எல்.எம் பட்டம் பெற்றார்கள் . மேலும் 4 மாணவர்கள் பி.எஸ்.சி இளங்கலை பட்டம் பெற்றனர். பல்வேறு துறைகளை கொண்ட டீன் மற்றும் தரவரிசை பட்டியலில் முன்னணி வகித்த மாணவர்களுக்கு 10 சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன