பொய் வாக்குறுதியால் ஆட்சி கட்டிலில் உட்கார்ந்த திமுகவை தூக்கி வீசி ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்கும் !
தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் பேச்சு!!
ராமநாதபுரம், அக்.15-
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கல், வளர்ச்சி பணிகள் தொடர்பாக செயல்வீரர்கள், வீராங்கனையர் ஆலோசனை கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் ஏற்பாட்டில்
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் நிஷா திருமண மகாலில் நடந்தது. அதிமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்
எம் ஏ முனியசாமி தலைமை வகித்தார். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன் வரவேற்று பேசுகையில்:
இராமநாதபுரம் மாவட்டம் அதிமுக கோட்டை. அதிலும் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறுபவர்கள் ஆட்சி பிடிக்கும் ராசி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக அமோக வெற்றி பெறும். ஆற்றல் மிகுந்த மாவட்ட செயலாளர் வழிகாட்டுதலில் அனைத்து நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளரின் சிறப்பான வழிகாட்டுதலில் திமுகவின் மக்கள் விரோத கொள்கைகளை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மக்களிடம் சிறந்த முறையில் கொண்டு செல்கின்றனர். தற்போது தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிமுக கட்சியின் ஆணி வேராக செயல்படுகிறது என்று கூறினால் அது மிகையாகாது.
இவ்வாறு பேசினார்.
தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வி வி ஆர் ராஜ் சத்யன், அதிமுக அமைப்பு செயலாளர் சுதா கே பரமசிவம், மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆர் ஜி ரத்தினம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர்
சேது பாலசிங்கம் ஆகியோர் பேசினர்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன் பேசியதாவது:
ஏழை குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய
தாலிக்குத் தங்கம், பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் உள்ளிட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு நிறுத்தி விட்டது. குடிநீர் வரி , வீட்டு வரி, சொத்து வரி. மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி ஏழை, எளிய மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில்
7.5% இட ஒதுக்கீடு மூலம் ஏழை, எளிய மாணாக்கர் 435 பேர் அரசு மருத்துவ கல்லூரிகளில்
கடந்த 4 ஆண்டுகளாக
படித்து வருகின்றனர். அதிமுக பற்றி பொய், வதந்தி , பொய் வாக்குறுதி மூலம் ஆட்சி கட்டிலில் அமர்ந்த திமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான், முதல்வராக இருந்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் கிடைத்த மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் தொடரும். அதிமுகவில் முக்குலத்தோருக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வில்லை என திமுக அவதூறு பரப்பி வருகிறது. அதிமுகவில் தற்போதுள்ள மாவட்ட செயலாளர்
82 பேரில் 23 பேர் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தோராவர். சாதி, மதங்களை புறம் தள்ளி அனைத்து சமூகத்தினரையும் அரவனைத்து செல்லும் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். தொண்டர்களின் உள்ளுணர்வுகளை அறிந்து எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். தன் குடும்பம் மட்டுமே திமுகவில் முக்கிய பொறுப்பு, ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற நோய் பிடித்த திமுகவை குணப்படுத்தும் மருந்தாக அதிமுக ஆட்சி மீண்டும் அமைய
2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுகவின் 100 சதவீத வெற்றிக்கு நாம் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநில மாணவரணி செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி விருதுநகர் மண்டல செயலாளர்
அ.சரவணக்குமார்,
பொதுக்குழு உறுப்பினர்
ஜெய்லானி சீனிக்கட்டி, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் கே என் கருணாகரன்,
நாகராஜன் ராஜா,
மருத்துவரணி மாவட்ட செயலாளர் கே இளையராஜா, ராமநாதபுரம் நகர் செயலாளர்
என் ஆர் பால் பாண்டியன், துணை செயலாளர் ஆரிப் ராஜா, மண்டபம் பேரூர் செயலாளர் கே எம் ஏ சீமான் மரைக்காயர், பட்டணம்காத்தான் துணை தலைவர் வினோத், அதிமுக நிர்வாகி நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.