திருப்பத்தூர் மாவட்டம்
ஏலகிரி மலையில் ரூ.4.93 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்த நிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பூங்கொத்து வழங்கி நன்றிகளை தெரிவித்தார்
திருப்பத்தூர் :ஜன:09,
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ரூ.4.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கத்தினை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் ரூ.127.90 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட விளையாட்டு வளாகங்கள், ஒலிம்பிக் அகாடமிகள், பாரா விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேதநாத ரெட்டி இ.ஆ.ப., அர்ஜூனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் ஞா.சத்யன், அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பாராலிம்பிக்ஸ் பதக்க வீராங்கனை துளசி மதி முருகேசன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பூங்கொத்து வழங்கி நன்றிகளையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார்.