தென்தாமரைகுளம்., அக். 25.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கேப் பொறியியல் கல்லூரியில் இந்தோ ஜப்பானிய கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் கலந்து கொண்ட இந்தியா மற்றும் ஜப்பான் இடையான வேலைவாய்ப்பு தொடர்பான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த கல்லூரியின் நிறுவனர் கிருஷ்ணபிள்ளை மற்றும் துணை நிறுவனர் டாக்டர் ஐயப்பா கார்த்திக்,தலைமை நிர்வாக அதிகாரி ரெனின், முதல்வர் தேவ் நியூலின் ஆகியோர் இணைந்து கலந்தாய்வை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர் ஜெலக்ஸ் வரவேற்புரை ஆற்றினார், கிருத்திகா நன்றி உரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியை ஆசிரியர்கள் ரவிக்குமார், ரம்யா ஜாய் மற்றும் கேப் பொறியியல் கல்லூரியின் ஜப்பானிய பயிற்றுனர் வினோத் குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.இதில் கேப் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் ஜப்பானை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.