முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் , தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி பூமாதேவி முன்னிலையில் தென்காசி காந்தி சிலை முன்பு வைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தியின் திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்
நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், பொதுச் செயலாளர் சந்தோஷ் , துணைத் தலைவர் சித்திக், தேவராஜன், நகரப் பொருளாளர் ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரஃபீக், சுப்பிரமணியன் மற்றும் சிவாஜி மன்ற கணேசன், பீர் முகம்மது, சபரி முருகேசன், கண்ணன், agm கணேசன், மாவட்ட துணைத் தலைவி சண்முக சுந்தா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்