நாகர்கோவில் – செப்டம்பர் – 24,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என கேட்டு பூத்துறை கிராம மக்களுக்கு ஆதரவாக அருட்பணி பங்குதந்தை பென்சிகர் தலைமையில், ஊர்கமிட்டி செயலாளர் அருளானந்தம் , முன்னிலையில் கமிட்டி உறுப்பினர்கள் டிக்கோஸ்ட்டன், டென்னிஸ், ஆன்றனி , அப்போஸ்தலன் , மரிய ஜெரின், சுமி மற்றும் பூத்துறை ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை இப்பொழுது ஏழு வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய இடங்களிலிருந்து குறிப்பாக கொல்லங்கோடு ஏ, பி, சி ஆகிய இடங்களில் இருக்கின்ற கனிம வளங்கள் நிறைந்த மணலை எடுத்து அதை பிரித்து ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கும் முதலாளிகளுக்கும் கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கிறது. என்று நாங்கள் கேள்விப்படுகின்றோம். இந்த பகுதியில் மணல்களை எடுத்தால் மக்கள் உடைய வாழ்வு பாதிக்கப்படும் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக அந்த இடம் மாற்றப்படும் ஆகவே மக்கள் சார்பாக குறிப்பாக பூத்துறை கிராமத்தின் சார்பாக நாங்கள் இந்த அரசிற்க்கு கண்டனத்தையும் எங்களுடைய எதிர்ப்பையும் தெரிவிக்கின்றோம். அதேபோன்று வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெற இருக்கின்ற அந்த மக்கள் கருத்து கூட்டத்தை உடனடியாக ரத்து செய்து மக்களுடைய நலங்களுக்காக நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்று இந்த மத்திய அரசையும் தமிழக அரசையும் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம் . இந்த மணல் அதில் இருக்கின்ற கனிம வளங்களை பிரித்தெடுக்கின்ற பொழுது மக்களுக்கு பல நோய்கள் ஏற்படுகின்றன குறிப்பாக புற்று நோய்கள், தோல் வியாதிகள், அதேபோன்று சுவாச கோளாறுகள் , மலட்டுத்தன்மை ஆகிய நோய்கள் பெரும்பாலான மக்கள் மத்தியில் இன்று ஏற்படுகின்றது . இது அரசாங்கம் அறிந்து இருக்கின்ற ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்திலே புற்றுநோய் என்பது அதிகமாக இருக்கின்றது. காரணம் இந்த மணல் ஆலையிலிருந்து வெளி வருகின்ற கதிர்வீச்சினால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் . இதையெல்லாம் அறிந்த பிறகும் இந்த அரசாங்கம் இந்த மணலை அள்ளுவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதை நினைத்து நாங்கள் வருந்துகின்றோம் இதற்கு எதிராக தொடர்ந்து நாங்கள் குரல் கொடுப்போம் அரசாங்கம் இத்தகைய மக்கள் விரோத செயல்களை கைவிட வேண்டும் மக்களுக்கு நல்ல ஒரு திட்டங்களை தீட்டி மக்களுடைய வாழ்வு வளம் பெற அவர்கள் நல்ல செயல்பாடுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம் என்று அருட்பணி பென்சிகர் செய்தியாளர்களிடம் கூறினார்.