இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் மத்திய மண்டலம் முயற்சியில்
சவுதி அரேபியா ரியாத்தில் விபத்தில் சிக்கிய தஸ்தகீர் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்!
தன்னலமற்ற தமுமுகவின் சேவையை உறவினர்கள் மனம் உருகி பாராட்டினர்!!
ராமநாதபுரம், அக்.10-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நஜ்முதீன் தஸ்தகீர் ரியாத்தில் ஒரு வாகன விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த தகவல் இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் கிழக்கு மண்டல நிர்வாகி யூனுஸ் மூலமாக ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது மற்றும் சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இத்தகவலின் அடிப்படையில் மண்டல தலைவர் நூர் முஹம்மது ஆலோசனைப்படி மண்டல இணைச் செயலாளர் திருக்கோவிலூர் ஷாக்கீர் பேக், சமூகநலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாட்சா மற்றும் இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் நிர்வாகிகள்
கள்ளக்குறிச்சி அப்துல்லா, தாஜுதீன் , திருவண்ணாமலை வினோத்குமார் , வல்லம் சையத் அலி ஆகியோர் உடனடியாக தஸ்தகீர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் பல கட்ட ஆலோசனைகள் நடத்தி அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் செய்தனர்.
மூன்று மாத கால தொடர் சிகிச்சைக்கு பிறகு இந்திய தூதரகம் மற்றும் தஸ்தகீர் பணிபுரிந்த நிறுவனத்தின் ஊழியர்களின் ஒப்பற்ற உதவியால் ,05-10-2024 சனிக்கிழமை அன்று இலங்கை வழியாக இந்தியா அனுப்புவதற்கு அனைத்து பணிகளும் முடித்துக் கொண்டு ரியாத் சர்வதேச விமான நிலையம் சென்ற பொழுது ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தஸ்தகீருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதி மறுத்துவிட்ட காரணத்தினால் அன்று அவர் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.
மீண்டும் இரண்டு தினங்களுக்குப் பிறகு 7-10-2024 திங்கட்கிழமை இரவு ரியாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை வழியாக சென்னைக்கு தஸ்தகீர் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டு , சென்னை விமான நிலையத்தில் அவருடைய உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த உன்னத சேவைக்கு உதவிய அனைத்து இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் உறவுகளுக்கும் , மருத்துவமனை ஊழியர்களுக்கும் , இதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை நஜ்முதீன் தஸ்தகீர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.