அரியலூர், அக்;20
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தர நிர்ணய சான்று வழங்கப்படுகிறது. அதன்படி இதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் மரு.டி.எஸ்.
செல்வவிநாயகம் அவர்களின் நெறிமுறைகளின் படி , மாவட்ட ஆட்சித்தலைவர்,பி. இரத்தினசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்திய தர நிர்ணய குழு டெல்லி அலுவலகத்தின் அறிவுரையின்படி நோய்களுக்கு தரமான உயரிய சிகிச்சை வழங்கிட அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குமிழியம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு பணிகளை நிர்ணைய சான்று ஆய்வு குழுவினர்கள் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ரோஷன்குப்தா மற்றும் வினோத்குமார் சரிமல்லா ஆகியோர் அக்டோபர் மாதம் 18 மற்றும் 19ஆம் தேதியில் சனிக்கிழமை குமிழியம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளி பதிவு , தொற்றா நோய் பிரிவு, கட்டு கட்டும் அறை, சிறப்பு மருத்துவம், மருந்தகம், கழிவறை, ஊசி போடும் அரை, ஆய்வகம், அவசர சிகிச்சை பிரிவு, கண் மருத்துவம், நம்பிக்கை மையம், ஸ்கேன் அறை, பல், சித்த, இயன்முறை மருத்துவம், பிரசவ அறை, அறுவை அரங்கம், பிரசவ கால பின் கவனிப்பு அறை, கழிவறை, அலுவலகம் மற்றும் பிற துறை உள்ளிட்ட 29 பிரிவுகளையும் சுகாதார நிலையத்தில் உள்ள அனைத்து துறைகளிலுள்ள பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு நடைபெற்றது. மேலும் நிர்ணய சான்று ஆய்வு குழுவினர்கள் அங்குள்ள அனைவருடைய செயலும் சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்கள். இந்த ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் மரு. அசோகசக்கரவர்த்தி, மருத்துவ அலுவலர்கள் மரு. பிரியா,மரு. பரத்வாஜ்,மரு. நித்யா,மரு. கௌரி சுனிதா, உதவி திட்ட மேலாளர் மரு. விஜயபாரதி, வட்டார, பகுதி, கிராம சுகாதார செவிலியர்கள் மாவட்ட தர நிர்ணய ஆலோசகர், செவிலியர்கள் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் , மருந்தாளுனர், சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வக நுட்பனர்கள், மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர். மாவட்ட சுகாதார அலுவலர் (பொ) மரு.வி.சி. சுபாஷ்காந்தி குமிழியம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு வட்டார மருத்துவ அலுவலர் , மருத்துவ அலுவலர்கள், உதவி திட்ட மேலாளர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.