கோவை மாவட்டம் அன் னூர் அருகே சொக்கம்பா ளையம் திருமுருகன் நகரில் வசிப்பவர் விஜயகுமார் (வயது 45), பா.ஜனதா பிரமுகர். இவர் கார் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார்.கடந்த 18-ந் தேதி இவரது வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்கம், 9 பவுன் நகைகள் கொள்ளை போன தாக அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர விசாரணை நடத்தி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதி யைச்சேர்ந்த அன்பரசன் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை போனது ரூ.18% லட்சம், 9 பவுன் நகைகள், 200 கிராம்வெள்ளி என்று தெரியவந்தது. அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகைகள் மீட்கப்பட்டன. பா.ஜனதா பிரமுகர் மீது வழக்கு இதனிடையே காவல்துறையினரிடம் ரூ.1½கோடி கொள்ளை போனதாரக பொய்யான தகவல் கொடுத்ததாகவும், இந்த பொய் தகவலால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியதாகவும் புகார்தாரர் விஜயகுமார் மீது நீதிமன்ற வழிகாட்டுதல்படி 2 பிரிவுகளின் கீழ் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த னர். மேலும் இவரை கைது செய்வது தொடர்பாக நீதி மன்ற நடவடிக்கை எடுக்கப் படும் என போலீசார் தெரிவித்தனர். போலீசில் பொய்யான புகார் அளித்த பா. ஜனதா பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயகுமார் கொடுத்த பொய்யான தகவலால் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.