திருப்பூர் ஜூலை:10
கடந்த 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 3 சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டு சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசு அமல்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்திய அரசை கண்டித்து திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அட்வகேட் அசோசியேசன் தலைவர் பூபேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்தன் , மோகன் , தமயந்தி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மத்திய அரசு திருத்தப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களையும் எந்த வித விவாதமும் இன்றி திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். அதுவரை பல்வேறு விதங்களில் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.