[9:20 am, 20/3/2025] Jerome Selvam🧑🏻💼: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி மங்கை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பியது மகிழ்ச்சிக்குரியது.
சர்வதேச விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பெண் இனத்திற்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது தமாகா தலைவர் ஜிகே வாசன்.
டெல்லி மார்ச் 20
நியூ டெல்லி
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.
சர்வதேச விண்வெளி மங்கை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட 4 பேர் குழு வெற்றிகரமாக பூமிக்கு வந்தது மகிழ்ச்சிக்குரியது. உலகமே வரவேற்கிறது.
8 நாள் பயணமாக விண்வெளிக்குச் சென்ற இவர்கள் 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
சுனிதா வில்லியம்ஸ் புட்ச் வில்மோர், நிக் ஹக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்பனூர் ஆகியோர் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தின் கேப்சூலில் அமர்ந்து, பத்திரமாக கடலில் இறங்கினர்.
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் ஒரு சாதனை பெண்மணி. இவர் ஒரு திறமையான போர் விமானி, கடற்படை விமானி என்பது கூடுதல் பெருமை.
மேலும் இவர் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி என்பது இந்தியாவிற்கு பெருமையாக இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவின் புகழ் உலக அளவில் சிறக்கிறது.
விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமிக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொண்டவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும் கடின உழைப்பால், தொடர் முயற்சியால், மிகுந்த ஆர்வத்தால் சர்வதேச விண்வெளியில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதை உலகமே பாராட்டுகிறது.
மேலும்
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
எனத் தெரிவித்துள்ளார்.
[9:20 am, 20/3/2025] Jerome Selvam🧑🏻💼: பூமிக்கு வந்த தேவதைக்கு “வெல்கம் சுனிதா வில்லியம்ஸ்” என்ற வடிவத்தில் அமர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் வரவேற்பு:-
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளி ஆராய்ச்சிக்கு பின்னர் இன்று அதிகாலை வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். உலகமே உற்று நோக்கிய இந்த நிகழ்வை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறையில் உள்ள குட் சமாரிட்டன் என்ற தனியார் பள்ளியில் மாணவ-மாணவிகள் வெல்கம் சுனிதா வில்லியம்ஸ் என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியன்ஸ்க்கு வரவேற்பு தெரிவித்தனர். மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் 250 மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
[9:21 am, 20/3/2025] Jerome Selvam🧑🏻💼: திண்டுக்கல்லில் மலையாள சமாஜத்தின் சிறப்பு பொதுக்குழு 2025-28 நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
திண்டுக்கல் மலையாள சமாஜத்தின் சிறப்பு பொதுக்குழு 2025-28 நிர்வாகிகள் தேர்தல் நிகழ்ச்சி திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் உள்ள ஸ்ரீநிதி மினி ஹாலில் நடைபெற்றது. இப்பொதுக்குழு தேர்தலில் தலைவராக பி.வி.சுப்ரமணியம், செயலாளராக
கே.சுகுமாரன், பொருளாளராக விமல் கண்ணன், துணைத் தலைவராக பி,ராம்குமார், துணைச் செயலாளராக சுரேஷ் கண்ணன், தணிக்கையாளராக கிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்வில் சாதனை படைத்த மகளிர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.