மயிலாடுதுறை அக்.2
நிகழ் நிதியாண்டில் (2024-25) இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளா்ச்சியடைய வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதார நிபுணர் ஆடிட்டர், குரு சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடா்பாக மேற அவா் பேசுகையில், ‘குறுகிய காலத்துக்கு நிச்சயமில்லாத சூழலை உலகம் எதிா்கொண்டு வருகிறது. உலகளாவிய வா்த்தகத்தின் வேகமும் குறைந்துள்ளது. எனினும் மத்திய அரசின் நிதி கொள்கைகளால் கரோனாவுக்கு பிந்தைய இந்தியாவின் பொருளாதார மீட்சி வலுவடைந்துள்ளது. இதற்கு கவனமான மேக்ரோ பொருளாதார நிா்வாகமே காரணம். இது நிலையான பொருளாதார வளா்ச்சிக்கு அடித்தளமிட்டது. நிகழ் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வளா்ச்சியடைய வாய்ப்புள்ளது. இது நடப்பு உலக சூழலில், மிக நல்ல வளா்ச்சியாகும்.
உணவு பாதுகாப்பை உறுதி செய்து ஆக்கபூா்வமான வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும். அத்துடன் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான ஒழுங்குமுறை முட்டுக்கட்டைகள் தளா்த்தப்பட்டு, அந்தத் துறைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். விவசாயம் சாராத வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அந்தத் துறை முக்கியமானது’ என்றாா்