இந்திய அரசு நேரு யுவகேந்திரா மற்றும் இளையபாரதம் அமைப்பும் இணைந்து இந்திய அரசியமைப்பு சட்டம் தினம் நிகழ்ச்சி திண்டுக்கல் ஜி.டி.என். சட்டக்கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நேருயுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் சரண் வி கோபால் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் P.S. சீனிவாசன், துணை முதல்வர் சுடலைமுத்து. பேராசிரியர் A. மதி வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இளைய பாரதம் அறக்கட்டளையின் அறங்காவலர் இராதாகிருஷ்ணன வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் இந்திய அரசியலமைப்பு சட்ட உறுதி மொழியை. தேசிய இளைஞர் விருதாளர் மாரிமுத்து வாசித்தார். எனது அரசியலமைப்பு எனது பெருமை பேரணியை திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் Dr.N.M.B. காஜாமைதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் சட்டக்கல்லூரி மாணவ , மாணவிகள் , பேராசிரியர்கள் உட்பட சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இளையபாரதம் இளைஞர் மன்றத் தலைவர் ஜெகதீசன் நன்றி கூற பேரணி இனிதே நிறைவுற்றது.