சென்னை, ஆகஸ்ட்-06
இந்தியன் வங்கியின் 2024ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவுகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் எஸ் எல் ஜெயின்,
இந்தியன் வங்கியின் உலகளாவிய வர்த்தக மதிப்பு 11 % அதிகரித்து ரூ.12லட்சத்து 20 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.
வங்கியின் நிகர லாபம் ஜூன் 23 இல் ரூ.1709 கோடியிலிருந்து 41 % உயர்ந்து ஜுன் 2024 ல் ரூ.2403 கோடியாக உள்ளது.
ஜூன் 2023 ல் ரூ 5703 கோடியாக இருந்த நிகர வட்டி வருமானம் 8% உயர்ந்து ஜூன் 2024 ல் ரூ 6178 கோடியாக உள்ளது .வங்கியின் டெபாசிட்கள் 10% அதிகரித்து ரூ.6,81,183 கோடியாக உள்ளது.
சில்லறை விற்பனை, விவசாயம் மற்றும் சிறுகுறு தொழிலுக்கானமுதலீடு ஜூன் 23 இல் 2,76,435 கோடியிலிருந்து ஜூன் 24 இல் 3,13,301 கோடியாக 13% இந்த ஆண்டு வளர்ச்சியடைந்துள்ளது.
தொழில் வளர்ச்சியில் உள்நாட்டு முன்னேற்த்திற்காக 62% பங்களிப்பு உள்ளது .
வீட்டுக் கடன் (அடமானம் உட்பட) 13% அதிகரித்துள்ளது
மொபைல் பேங்கிங் பயனர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 33% அதிகரித்துள்ளதுஎன்றார் .