திண்டுக்கல் ஜூலை:20
திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை கைலாஷ் சத்யார்த்தி சில்ட்ரன் பவுண்டேஷன் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அமைதி அறக்கட்டளை தலைவர் பொறியாளர் ரூபபாலன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் மூலம் 2030க்குள் குழந்தை திருமணங்களே இல்லாத மாவட்டமாக உருவாக்கும் முயற்சியில் அமைதி அறக்கட்டளையும் இந்திய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பும் செயல்பட்டு வருகிறது.
குழந்தை திருமண குற்றங்களில் ஈடுபடும் அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் 3563 குழந்தை திருமண வழக்குகளில் 181 வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்ட நிலையில் 92 சதவீதம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு அறிவுரை வழங்கவும் குழந்தை திருமணத்தை ஒரு குற்றமாக கருதவும் குழந்தை திருமணத்தை தடுக்க முடியாத போதெல்லாம் சட்டபூர்வமான தலையீட்டை பயன்படுத்துவது குறித்தும், குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமலாக்கமே முக்கியமானது என்றும் குழந்தை திருமணங்கள் இல்லா இந்தியா குழந்தைகள் பாதுகாப்பின் ஒரு பகுதியாக உள்ளது 2022-ல் தொடங்கப்பட்ட ஒரு நாடு தழுவிய பிரச்சாரத்தின் புவன் ரிபுவின் டிப்பிங் பாயிண்ட் என்ற செயல் திட்டத்தில் 200 தொண்டு நிறுவனங்கள் பணிபுரிகின்றன.இவர்களின் முக்கிய இரண்டு பரிந்துரைகளாக நிலுவையை அகற்ற விரைவு நீதிமன்றங்களை உருவாக்குவது.தண்டனையை இரட்டிப்பாக்குவது, குறித்தும் குழந்தை திருமண குற்றங்களை குற்றவியல் சதிக்கு சமமாக கருதப்பட வேண்டும்.