நிலக்கோட்டை ஆக.28:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழுத் தலைவர் ரெஜினா நாயகம் தலைமை வகித்தார் அதிமுகவைச் சேர்ந்த துணைத்தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் யூனியன் ஆணையாளர் பத்மாவதி வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து
கவுன்சிலர் கணேசன் பேசியதாவது.
கடந்த ஐந்து ஆண்டுகால வரவு செலவு விபரங்களை அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் பிடிஒ பத்மாவதி இந்த யூனினுக்கு வந்த பிறகுதான் இந்த மன்றம் மிகவும் மோசமாகி கிடக்கிறது எனவும்
2020-ல் இருந்து செலவு செய்த திட்டப்பணிகள் விபரங்களை தெரிவிக்க வேண்டும் கிராமங்களில் பழுதடைந்த பழைய கட்டிடங்களை இடிக்கும் பொழுது ஒன்றிய கவுன்சிலரிடம் தெரிவிக்காதது ஏன்? பிடிஓ தனிச்சையாக செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது என்றார்.
இதற்கு பதிலளித்த யூனியன் துணை சேர்மன் யாகப்பன் ஒன்றிய செயலாளர் சொல்லி தான் பிடிஓ பழுதடைந்த கட்டிடங்களை இடிக்கச் சொன்னதாக தெரிவித்தார்,
அரசு அதிகாரி பிடிஓ ஒன்றிய செயலாளராக இருக்கிறாரா? அவர் எப்படி ஒன்றிய செயலாளர் சொன்னார் என கூறலாம் வரும் 10-ம் தேதி நடைபெறும் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொள்ள வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றார். மேலும் முறைகேடுகள் செய்த நத்தம் யூனியன் மீது நடவடிக்கை எடுத்தது போல் நிலக்கோட்டை யூனியனிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர் கப் சிப் என அமைதி காத்தனர் சுயேச்சை கவுன்சிலர்கள் கணேசன்,ராஜதுரை ஆகியோர் பேசிய சரமாரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர், கவுன்சிலர் இராஜதுரை 2020-ல் இருந்து செலவு செய்த திட்டப்பணிகள் விபரங்களை தெரிவிக்க வேண்டும் கிராமங்களில் பழுதடைந்த பழைய கட்டிடங்களை இடிக்கும் பொழுது ஒன்றிய கவுன்சிலரிடம் தெரிவிக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் சார்பாக கேட்டுக் கொண்டார், இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அடுத்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொள்ள கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தின் போது ஒன்றிய கவுன்சிலர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.