போடி ஆகஸ்ட் 19:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது அணை பிள்ளையார் அணைக்கட்டு இந்த அணைக்கு நமது அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் மலைப்பிரதேசங்களான குரங்கணி கொட்டக்குடி போடி மெட்டு மற்றும் போடி நகர் ஆகிய பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக அணை பிள்ளையார் அணைக்கட்டுக்கு நீர் வரத்து அதிகரித்து கடும் வெள்ளமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வருகின்றனர்.