நாகர்கோவில் செப் 13
கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஒரு சாதாரண படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டியும், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயிலில் ஒரு மூன்றடுக்கு குளிர் சாதன பெட்டிக்கு பதிலாக முன்பதில்லா பெட்டி ஒன்றும், ஒரு முன்பதிவு படுக்கை வசதி பெட்டி நீக்கப்பட்டு பொது பெட்டி மொத்தம் நான்கு சேர்க்கயிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.புதுவை – குமரி விரைவு ரயிலில் 25.01.2025 முதலும், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயிலில் 18.01.2025 முதல் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
தற்போது கொல்லம்-சென்னை எழும்பூர்-கொல்லம் இடையில் 17 பெட்டிகளுடன் இயங்கும் விரைவு ரயில் கூடுதலாக இரண்டு புது பெட்டிகள் இணைத்து இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்
நாடு முழுதும் ரயில்களில் முன்பதிவில்லா இருக்கை பெட்டிகள் அதிகரிக்க கோரி சுமார் 3500 மனுக்கள், 2024,ஜுலை மாதத்தில் ரயில்வேவுக்கு அனுப்பிய நிலையில் அதன் பலனாக, தென்னக ரயில்வேயில் ஒவ்வொரு ரயிலிலும் 4 பொது இருக்கை பெட்டிகள் இருக்குமாறு செய்துள்ள ஏற்பாட்டை வெளியிட்டுள்ளார்கள். மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, அதனை நடைமுறைப்படுத்திய ரயில்வே துறைக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.