கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உள்ள போச்சம் பள்ளி, ஜம்புகுட்டப்பட்டி மத்தூர், சந்தூர், ஜெகதேவி தாதம்பட்டி, புலியூர் வேலம்பட்டி, அந்தேரிப்பட்டி, கொட மாண்டப்பட்டி, ஒலப் பட்டி உள்ளிட்ட பகுதிக ளில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மாமரங்களை வளர்த்து வருகிறார்கள். போச்சம் பள்ளி தாலுகாவில் சுவை மிகுந்த ரகங்களான அல் போன்சா, தோதாபுரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் போன்ற ரகங்கள் அதிகளவில் விளைவிக் கப்படுகிறது. அறுவடை நேரத்தில் மழை, வெயில், பனி காற்று உள்ளிட்ட இயற்கை இடர்பாடுக ளால் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.
இதையடுத்து இடைப்பருவ மாங்காய் உற்பத்தியில் போச்சம் பள்ளி தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகளி டையே ஆர்வம் அதிக ரித்துள்ளது. இப்பகுதியில் விளையும் மாங்காய்களை சென்னை, கேரளா, கோயம்புத்தூர் உள் ளிட்ட பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த வியா ப பாரிகள் நேரில் வந்து
மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். இதன்மூ லம் நல்ல வருவாய் பெற்று வந்தனர்.
இந்நிலையில், விளைச் சல் அதிகரித்துள்ளதால் மாங்காய் விலை சரிந் துள்ளது.இதனால், விவ சாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறு கையில், ‘இடைப்பருவ மாங்காய் விளைச்சல், கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், மாங்காய்
விலை சரிந்துள்ளது. செந்தூரா கிலோ ரூ 80, பெங்களூரா ரூ200, நீலம் ரூ 55க்கு விற்பனையான நிலையில், தற்போது செந்தூரா ரூ 50க்கும், பெங்களூரா ரூ.25க்கும், நீலம் ரூ 30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால்,இடைப்பருவ மாசாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அறுவடை கூலி மற்றும் மருந்து தெளிப்பு போக் குவரத்து செலவுக்கு கூட வழியின்றி தவித்து வருகிற றோம் என்றனர்.