தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவியில் குளிக்க காவல் துறையினர் தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 7 நாட்களுக்கு பிறகு பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் (24.5.24) காலை முதல் குளிக்க அனுமதி வழங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர் இந்த நிலையில் பழைய குற்றால அருவிக்கு மேல் திடீரென பெய்த மழையால் வனப்பகுதியில் உள்ள நீர் வழித்தடத்தில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையறிந்த வனத்துறை ஊழியர்கள் மலைப்பகுதியில் இருந்து வந்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக அருவியில் குளித்த சுற்றுலா பயணிகளை வெளியேற்றினர்.
இதனால் தற்போது பழைய குற்றாலத்தில் 3 மணி நேரத்தில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்கு பிறகு பழைய குற்றாலத்தில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தண்ணீர் வரத்து குறைந்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.