கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புங்கனை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்து ஆறுதல் கூறினார், அப்பொழுது செய்தியாளர்களிடம் தேரிவித்தது,
ஊத்தங்கரை அடுத்த புங்கனை கிராமத்தில் புற்றுநோய் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக முப்பதற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அந்த கிராமத்தில் அரசு சார்பில் முறையான மருத்துவ முகாம் அமைத்து, பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அரசு சார்பில் சிகிச்சை அளிக்க வேண்டும், மேலும் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடித்துள்ளார். அப்போது விசிக பிரமுகர் ஜெயசூர்யா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.